Thursday, September 8, 2011

களவாணிப் பய...........

உன் அழகிய முகத்தில்
ஒரு சிறு முகப்பரு .....

எந்த களவாணிப்  பயலோ
உன் மேலக் கண்ணு வச்சுட்டான்டி
என உன் தாய்த் திட்டினாள்...

எனக்குப்  பொறை ஏற ஆரம்பித்தது ........

Tuesday, September 6, 2011

நண்பன்

ஒரு நல்லத் தோழன் ,,
ஒரு நல்ல  புத்தகத்துக்குச்  சமமாம் ...
எனக்கு சொந்தமாய்
ஒரு " நூலகமே " இருக்கிறது

Friday, August 5, 2011

என் வாழ்க்கைப்  பயணத்தை
 எப்படித்  தொடங்கினாலும்
 உன்னிடமே வந்து முடிவது போல்
வழிக் காட்டுகிறது
 என் வெட்கங்கெட்ட  மனசு.....

Saturday, July 23, 2011

நீ என்னைப் பார்க்கும்  நாட்களில்
" ஹைக்கூ "க்களாகவும் ,,,
நீ என்னைப் பார்க்காமல்  மௌனமாய்க் கடந்து
செல்லும் நாட்களில்
" புதுக் கவிதைகளாகவும் "  ,,,
நான் உன்னைப் பார்க்காத நாட்கள்
" வெற்றுப்பக்கங்களாகவும் " நிரம்பிவழிகின்றன
என் டைரியில் ,,,

Tuesday, July 19, 2011

என் கவிதைகள்....


உன் அழகுகளின்
இரண்டாம் பாகம்


 என் கவிதைகள் ...

Sunday, July 17, 2011

களவாடியக் கனவுகள் ....


கனாக்  கண்டேனடிக் காதலி கனாக் கண்டேனடி...
நான் உனை காதலிப்பது போல் ,,
நீயும் எனை காதலிப்பது போல் ,,
நம்மை காதல் காதலிப்பது போல் ,,
கனாக்  கண்டேனடிக் காதலி கனாக் கண்டேனடி...

உனக்கும் எனக்கும் ஒரே ஒரு நிழல் இருப்பது போல் ,,
உன் நெஞ்சில் என் உருவத்தை நீ ஒட்டிக் கொண்டது  போல் ,,
என் கண்ணில் உன் உருவத்தை நான் பசைக்குத்தியது  போல் ,,,
கனாக்  கண்டேனடிக் காதலி கனாக் கண்டேனடி...

உன் நினைவுகள்  என்னை ஆட்டிப் படைப்பது போல்,,
உன் கனவுகள் என் இரவுகளை உண்டுவாழ்வது  போல் ,,
நம் காதல் என் கவிதைகளை தின்று வளர்வது  போல் ,,
கனாக்  கண்டேனடிக் காதலி கனாக் கண்டேனடி...

தேய்பிறை இல்லா நிலவு இருப்பதுப் போல்,,
நமக்குள் வார்த்தை ஜாலம் குறைந்தது போல்,,
உன் மௌனமும்  எனக்குப் புரிவது போல்,,,
புதிதாய் ஒரு மொழி நமக்கு தெரிந்தது  போல் ,,
கனாக்  கண்டேனடிக் காதலி கனாக் கண்டேனடி...

நான் உனை மணமுடிப்பது  போல் ,,
காமம் முற்றிலும் குறைந்தது போல் ,,
காதல் முழுதாய் நிறைந்தது போல் ,,
ஆசைக்கு ஒன்று,,ஆஸ்திக்கு ஒன்று என இல்லாமல் ,,
அறிவாய் ஒன்று ,,அழகாய் ஒன்று என
இரு ஆண் குழந்தைகள் நமக்குப்  பிறப்பது போல் ,,
கனாக்  கண்டேனடிக் காதலி கனாக் கண்டேனடி...

ஏன் பெண் குழந்தை வேண்டாமா என நீ என்னிடம் கேற்ப்பது போல்,,
அதற்க்கு தான் நீ இருக்கிறாயே என நான் சொல்வது போல்,, 
அதைக் கேட்டு  நீ காதலாய் என் மார்பில் சாய்வது போல் ,,,
என் இருதயம் கருவரையாய் மாறி உனை சுமப்பது  போல்,,
 கனாக்  கண்டேனடிக் காதலி கனாக் கண்டேனடி...

உனக்குள் எனையும் ,,எனக்குள் உனையும் ரசிப்பது போல்,,
இந்தக் கவித்தனமான வாழ்கையை நாம் வாழ்வது போல் ,,
முதலில் நீ இந்த மண்ணை விட்டு போவது போல்,,,
பின்பு என்னை விட்டுப் போவது போல்,,,
கனாக்  கண்டேனடிக் காதலி கனாக் கண்டேனடி...

நீ இல்லாத என் உலகம் எப்படி இருக்கும் என
 இருபத்திநாலு மணிநேரம் மட்டும் நான் வாழ்ந்துபார்ப்பது போல்,, 
பின்பு நான் உன்னையே வந்து சேர்வது போல் ,,
எங்கு சென்றாலும் என் வாழ்வு உன்னிடமே வந்து முடிவது போல் ,,
கனாக்  கண்டேனடிநான் காதலி கனாக் கண்டேனடி...

பொதுவாய் கனவுகள் பலிககாதது  போல் ,,,
 இந்த கனவு பலிக்காவிட்டாலும் இப்படியே என் வாழ்நாள் இறுதிவரை தொடர்வது போல்,,,
மழை தின்று உயிர் வாழும் சக்கரபாண பறவை போல்,,,
இந்த கனவை தின்று நானும் ,என் காதலும் உயிர் வாழ்வது போல்,,,
கனாக்  கண்டேனடி காதலி கனாக் கண்டேனடி...

Thursday, July 14, 2011

ஓ கடவுளே ,,
நாட்களின் நீளத்தை
அதிகப்படுத்து .....
தினமும்
24 மணிநேரம்
போதவில்லை
அவளை காதலிக்க....

Wednesday, July 13, 2011

என் கவிதைகளின் ,,
உயிர்த்திணை
  நீ...
உனக்கு ,,
அக்றிணை
 என் கவிதைகள் .....

Tuesday, July 12, 2011

காதல்க் கதை

கடைசிப் பக்கத்தை
தொலைத்த,,
மர்மநாவல் போல் ...
உனக்கும் ,,எனக்கும்
இடையேயான ,,

காதல்க் கதை ........

Tuesday, June 28, 2011


ஏது செய்தாலும்த்
தடை செய்ய முடியவில்லை
பகலில்
" உன் நினைவுகளையும் ",,
இரவில்
" உன் கனவுகளையும் ".....

Tuesday, June 21, 2011

யுத்தம்....


உன் மௌனத்திற்கும் ,
என் காத்திருப்பிற்கும்
இடையே நடக்கும்
யுத்தமாகிப் போனது
என் காதல்....
நம் இருவரில்
யார்த் தோற்றாலும்
என் காதல் ஜெயிக்கட்டும் ....?

Tuesday, June 14, 2011

நீ...........


என்
இதய தேசத்தின்
" தேசியப்பறவை "
" நீ ".....

Sunday, June 12, 2011

தேவதை.......


தேவதைகள்
உண்மையா, பொய்யா ???
தெரியாது....
உண்மை
என்றால் ,,,
நான்
" தேவதையை "
காதலிக்கிறேன் ,,,
பொய்
என்றால்
நான் உலகின்
" முதல் தேவதையை "
காதலிக்கிறேன்......

வார்த்தைகளின்
கோர்வை தான்
" கவிதைகளாம் "...


" அவளின்
மௌனங்களும் " தான்....

Saturday, June 4, 2011

காதல்ப்பக்கங்கள்


என் வாழ்க்கை
டைரியில் இருந்து ,
கிழித்து ஏறிய முடியாத
பக்கங்கள்
உன் " நினைவுகள் "....