
அன்புள்ள காதலிக்கு ,,
காதல் ,காதல் அறிய அவ .....
பொருள் :இதயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டி விண்ணப்பம் ..
ஒரு பார்வை
ஒரு புன்னகை
ஒரு துளி கண்ணீர்
இது போதுமாம் காதலில் விழ ...
கேலி செய்திருக்கிறேன் இப்படி சொன்னவர்களை ,,
உன் ஒற்றை பார்வையில் நான் விழாதவரை ......
காதல் ,காதல் அறிய அவ .....
பொருள் :இதயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டி விண்ணப்பம் ..
ஒரு பார்வை
ஒரு புன்னகை
ஒரு துளி கண்ணீர்
இது போதுமாம் காதலில் விழ ...
கேலி செய்திருக்கிறேன் இப்படி சொன்னவர்களை ,,
உன் ஒற்றை பார்வையில் நான் விழாதவரை ......
உன்னை பார்க்கும் வரை ..
இப்போது
உன் அழகை திருடி
வார்த்தைகளாக்கி
" கவிஞன் " என்ற பெயரோடு
உலவும் " திருடனாகி " போனேன் நான்...
நான் கவிதை எழுதி காண்பித்தால்
எங்க இருந்துடா
இதை "திருடி " வந்தாய்
என்று கேற்கும்
நண்பர்களிடம்
நான் எப்படி சொல்லுவது
" உன்னிடம் " இருந்து தான்
திருடிகொண்டிருக்கிறேன்
என்பதை ...
நீ இருக்கும் போது
உன் நிழலிடமும் ,,
நீ இல்லாத பொழுதுகளில்
உன் நினைவுகளிடமும்
பேசிகொண்டிருகிறேன் நான் ....
நான் எப்போதோ ,
உன்னிடம் எதையோ கேற்க,
நீ உன் உதட்டை சுழித்து
தலையை இடம் வலமாக ஆட்டி இல்லை என்றாய்...
அன்றிலிருந்து
உன் உதடு சுழிக்கும்
அழகை பார்ப்பதற்காகவே
உன்னிடம் " இல்லாத பொருள்களை "
கேட்டுகொண்டிருக்கிறேன் நான் ...
நான் உன்னை காதலிக்கிறேன்
என்று உனக்கு தெரிந்தும்,
இன்றுவரை நீ
உன் மௌனத்தையே
பதிலாக கொடுத்துக்கொண்டிருக்கிறாய் ...
மௌனம் அழகுதான் ,
இருந்தாலும் ,,
உன் ஒவ்வொரு நிராகரிப்பிலும்
கொஞ்சம் கொஞ்சமாய்
செத்துக்கொண்டிருகிறது என் காதல் கரு ....
இருந்தாலும் பெண்ணே ,,
இன்னமும் என் காதல் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது
நீ என்னை கடந்து தூர சென்று
திரும்பிப்பார்க்கும் உன்
அந்த " ஒற்றை பார்வையில் " .....




