Saturday, February 14, 2015

நானெழுதிய கவிதை...............

எனக்கும் இந்த கவிதைக்கும்

எந்த பேதமுமில்லை ..
என்னை போலவே இருக்கும் ,,
பலருக்கும் புரியாமல் .. மன்னிக்கவும் ..

தன்னை எழுதி

தொலைந்து போக வைத்த

கவிஞனை தேடி அலையும்

ஓர் கவிதையின் கதை.....

------------------------------------- **------------------------------------

மறதி வரம் தான்

அவள் ஞாபகம் வராத  வரை ...

------------------------------------- **------------------------------------

நீ மீண்டும் வந்திருக்க வேண்டாம் இப்படி , , ,

கடைசியாய் எனக்கு நீ அனுப்பிய

பாடலின்
 "முதல் வரியாக "........

------------------------------------- **------------------------------------

கவலைபடாதே

உன்னை பற்றியும் , என்னை பற்றியும்

இல்லை இந்த வரிகள் ...

அவனை பற்றியும் அவளை பற்றியும் ... ஆனால்

இங்கே நீயும், நானும்  
அவள், அவனாய்

------------------------------------- **------------------------------------

இயங்கும் படிக்கட்டில் (escalator )
நம் முதல் பயணத்தில்

நீ தடுமாறி என் கையை பிடித்த படியில்

தடுமாறி போனேன் நான்..

இன்னுமும் பிடித்திருகிறது , அந்த பிடி என் இதயத்தை ....

------------------------------------- **------------------------------------

ஓர் இரவு உணவு வேளையில்
உனக்காக சைவமான நான்,

இன்னுமும் அசைந்து கொடுக்கவில்லை அசைவமாக....

 ------------------------------------- **------------------------------------
உன்னை பற்றி மட்டும் ஓர் கவிதை கேட்டாய்,

நீ காதலை வெளிபடுத்திய விதம்

அழகாய் இருந்தது  உன்னையும் விட ......

------------------------------------- **------------------------------------

காதல்

சொல்வதில் , எற்றுகொள்வதில்

மட்டுமில்லை

விலகி செல்வதிலும் இருக்கிறது வலுவாக வலியாக  ...

நான் விரும்பியும் விலகிசென்றேன்

நான் விரும்பியே விலகிசென்றேன் ...

------------------------------------- **------------------------------------

ஒரு வேளை நீ கேட்டதும்,,

அந்த கவிதையை
எழுதி கொடுதிருந்தால்,, இல்லை

விலகி சென்றவுடன்
உனக்காய் "உன்னை மட்டும் பற்றி "

 எழுதியதை கொடுத்திருந்தால்...

அவள் வாழ்க்கையும் , அவன் வாழ்க்கையும்

நம் வாழ்கை ஆகி இருக்குமோ  !!

------------------------------------- **------------------------------------

அவன் எழுதாமல் தொலைத்த கவிதை  அது

எனை எழுத வைத்து "தொலைந்த " கவிதை  நீ

அந்த கவிதையை எழுதி தொலைத்தக் கவிஞன் நான்

------------------------------------- **------------------------------------

இன்னுமும் என் கவிதைப் பட்டறையில்
         துரு ஏறாமல் இருக்கிறது

                   "அந்த கவிதை "

                 இல்லை இல்லை

இன்னுமும் என் கவிதைப் பட்டறையை
   துரு ஏற்றாமல் வைத்திருக்கிறது

                     "அந்த கவிதை "

------------------------------------- **------------------------------------

நீ வந்த சுவடுமில்லை,
போன வடுவுமில்லை ,,

வலி மட்டும் இருக்கிறது, வலிக்கிறது

------------------------------------- **------------------------------------

நாம் விலகியவுடன்,
இல்லவே  இல்லை

நான் விலகியதும்,

வளரவும் இல்லை,
சிதையவும் இல்லை ,
 புதையவும் இல்லை ,

அப்படியே இருக்கிறது ....உன் மீதான

               "என் காதல் கரு "

------------------------------------- **------------------------------------

உன் திருமண அழைப்பிதழாய்

எனக்கு அனுப்பிய அந்த பாடல் ....

பார்த்ததும் , கேட்டதும் புரிந்து கொண்டேன்

அவளாய்  இருந்து
 நீயாய்
 மாற தயாரகிவிட்டாய் என ,....

------------------------------------- **------------------------------------

உன் திருமணத்திற்கு பின்
 நாம் சந்தித்த ஓர் சந்திப்பில்

நலம் விசாரித்தாய்
  என்னை பற்றி ..

முன்பு உனக்கு என்னிடம் பிடித்த ,
 பின்பு பிடிக்காமல் போன

அதே குறுஞ்சிரிப்பு உனக்கு பதிலாய்...

------------------------------------- **------------------------------------

இந்த கவிதையை நீ எங்கேனும் , என்றேனும்

படிக்கச் நேரலாம்,

உன் மனம் நொந்தால் மன்னித்து விடு ...

என்னிடம்

மன்னிப்பும் கேட்டு விடு,,

என்னிடம் கவிதை கேட்டு சென்றதிற்கும்,,

 நான் கவிதை எழுதும் முன் சென்றதிற்கும் ...

------------------------------------------------------ **--------------------------------------

எனக்கும்  புரியும்
       இனி  நீ அவளாகமுடியது

                     நான் அவனாகமுடியாது ....

அனால் , நான் அவனோடுதான் ....

உன் ஞாபகம்  "மறந்து போகும் " வரை , அல்லது

உன் ஞாபகம்  "மறுத்து போகும் " வரை ,அல்லது
உன் ஞாபகம்  "மரத்து போகும் " வரை ..
------------------------------------- **------------------------------------
இதுதான்,,
 நான் உனை வைத்து
எழுதும் கடைசி கவிதையாக இருக்கலாம்...
நீயன்றி எழுதினால்,,
அது எப்படி கவிதையாகும்?!!
 அநேகமாக,,
இதுவே
என் கடைசி கவிதையாகவும் இருக்கலாம் ....

------------------------------------- **------------------------------------

கருவில் கலைந்த குழத்தை போல் தான்

என் காதல்..மீள்வது கடினம்தான்,

நான் மீண்டு கொண்டிருக்கின்றேன்

------------------------------------- **------------------------------------

நான் அவனை முழுதாய் மீட்டுக்கொண்டிருகிறேன்,,
அவன் மீண்டு கொண்டிருக்கும்போது

நீ மீண்டும் வந்திராதே  இப்பிடி

எனக்கு நீ அனுப்பிய பாடலின்

"முதல் வரியாக "....