Friday, February 14, 2014

அதுபோதும் எனக்கு...

உனக்கு என்றேனும் உன் வகுப்பறை போர் அடித்தால்,,
உன் கைப்பேசி-இன் இன்பாக்ஸ்-ல் நீ படிக்காமல் வைத்திருக்கும் என் குறுந்தகவல்-களை பார் ...
" அதை படித்துவிட்டு உனக்கு குறுஞ்-சிரிப்பேனும் வந்தால் " ..
அதுபோதும் எனக்கு...

உனக்கு என்றேனும் உன் மாலை வேளை மங்கிக்கிடந்தால் ,,
உனக்காக  நான் கிறுக்கிய  கவிதைகளை தருகிறேன் ..
அதை படித்துவிட்டு உனக்கு, " பைத்தியக்காரன் இப்படியா பொய் சொல்லுவான் " என்ற எண்ணமேனும்  வந்தால்

அதுபோதும் எனக்கு...

உனக்கு என்றேனும் FACEBOOK,TWEETER ,WHATS APP இந்த மூன்றும் மூட்-அவுட் செய்தால்.. உன் e -mail-ன் SPAM-box-இல் உனக்கு நான் எழுதிய கடிதங்களை வாசித்துப்பார்,
வாசித்துவிட்டு,என் e -mail-களை  நீ SPAM-இல் இருந்து இன்பாக்ஸ்க்கேனும் மாற்றினால்

அதுபோதும் எனக்கு...
உனக்கு என்றேனும் உன் இரவு வேளை உறக்கம் வராமல் இம்சை தந்தால் ,,கனவுகளில் உன்னோடு நான் வாழும் வாழ்க்கை காட்சிகளை கொஞ்சம் கடனாய் தருகிறேன்,,
அதை பார்த்துவிட்டு உறங்கும் உன் கனவில் ஒருமுறையேனும் கனவாய் வந்து உன் உறக்கத்தை கலைத்தேன் என்றால் ,

அதுபோதும் எனக்கு...

உனக்கு என்றேனும் நீ வழக்கமாய் செல்லும் என் வீதி சலித்துப்போனால் ,உனக்காய் என் வீட்டு வாசலில் நான் வைத்த ரோஜா செடிகளில் இருந்து ஒருமுறையேனும் ஒரே ஒரு பூவை பறித்து ரசித்து செல்..

அதுபோதும் எனக்கு...

உனக்கு என்றேனும் இந்த வாழ்க்கை வழக்கமாய் இருக்கிறதே ,
இவனை காதலித்துதான் பார்ப்போமே ,,என்று ஒரே ஒரு நொடியேனும் நீ எண்ணினால்

அதுபோதும் எனக்கு...