Friday, July 2, 2010

அதிசயம் ஆனவளே


உன் முகம் பௌர்ணமி நிலா,,
உன் கருவிழி அமாவாசை நிலா ,,
இரண்டையும் ஒருசேர கொண்டதால்
" அதிசயமான இரவு " நீ ....

உன் பார்வை சித்திரை வெயில் ,,
உன் புன்னகை மார்கழி குளிர் ,,
இரண்டையும் ஒருசேர கொண்டதால்
"அதிசயமான பருவம் " நீ ....

உன் அழகு வளர்பிறை ,,
உன் மௌனம் தேய்பிறை ,,
இரண்டையும் ஒருசேர கொண்டதால்
" அதிசயமான நிலவு " நீ ....

உன் புன்னகை தென்றல் ,,
உன் கோபம் சூறாவளி ,,
இரண்டையும் ஒருசேர கொண்டதால்
"அதிசயமான காற்று " நீ ....

இப்படி அதிசயங்கள் எல்லாம் சேர்ந்து
அதிசயம் ஆனவளே

எனக்குள் என்றும் நீ
"அதிசயமானவளே "....

No comments:

Post a Comment