Monday, October 20, 2014

நான் அவனாக முடியாது .....

எதற்கெடுத்தாலும்
தன் காதலனோடு ஒப்பிட்டு
சண்டையிட்டு தன் தாய் வீட்டில் இருக்கும்
மனைவிக்கு ,,,

  நலமறிய அவா ..

அவனுக்கு நீதான் உலகமாய் இருந்தாய் என்றாய் ,,
இருந்திருக்கலாம்,
அனால் என் உலகத்தில்
நம்மை வார்த்தவர்களும் , நம் வளர்ப்புகளும் இருக்கிறார்கள்
நான் என்ன செய்ய ...

அவன் உன் பிறந்தநாள் அன்று தங்கநகை பரிசளித்தான் என்றாய் ,,
நன் உன் பிறந்தநாள் அன்று மகளின் பள்ளிக் கட்டணம் கட்டினேன்
நான் என்ன செய்ய ...


அவன் உன்னை அடிக்கடி பார்க் ,பீச் ,சினிமா அழைத்து சென்றான் என்றாய்,,
நான் உன்னை கோவிலுக்கும் ,விருந்தினர் விசேசங்களுக்கும் அழைத்து சென்றேன் ..
 நான் என்ன செய்ய ...

அவன் உன்னை உனக்கு பிடித்த பைக்கில் " longdirve "அழைத்து சென்றான் என்றாய்,,
நான் நம் குழந்தையுடன்  வண்டியில் செல்லவே  பயப்படுகிறேன் 
நான் என்ன செய்ய ...

இத்தனை வித்தியாசங்கள் சொல்கிறாயே !! நீ கண்டிறாத  இன்னொரு வித்தியாசம் சொல்லட்டுமா ....
அன்று
" நான் அவனாய் இருந்தேன் "
இன்று
" நான் நாமாய் இருக்கிறோம் " ...

புரிந்து கொள் பெண்ணே -
பிரிந்து கொல்லாதே
..
நான் அவனாக முடியாது .....


இப்படிக்கு ..

அவனாய் இருந்து ,
இப்பொழுது
அவனாக முடியாத
" நான் "

No comments:

Post a Comment